பிரதமர் மோடியை கொல்ல ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் சதித்திட்டம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரதமர் மோடியின் உயிருக்கு குறிவைத்திருப்பதாக வெளிநாட்டைச் சேர்ந்த உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை குறிவைத்து ஜெய்ஷே முகமது சிறப்பு தற்கொலைப் படையை தயார் செய்து வருவதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்த சம்ஷேர் வானி தனது கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதம் மூலம் இந்த திட்டம் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செப்டம்பர் இறுதிக்குள் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு, அமிர்தசரஸ், பத்தான்கோட், ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட 30 முக்கிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *